131
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல் 
1 கர்த்தாவே, நான் பெருமையுடையவன் அல்ல. 
நான் முக்கியமானவனாக நடிக்க முயலவில்லை. 
நான் பெரியக் காரியங்களைச் செய்ய முயலவில்லை. 
எனக்கு மிகவும் கடினமான காரியங்களைக் குறித்து நான் கவலைப்படமாட்டேன். 
2 நான் அமைதியாக இருக்கிறேன். 
என் ஆத்துமா அமைதியாக இருக்கிறது. 
தாயின் கரங்களில் இருக்கும் திருப்தியான குழந்தையைப்போன்று 
என் ஆத்துமா சமாதானமாகவும் அமைதியாகவும் இருக்கிறது. 
3 இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு. 
அவரை இப்போது நம்பு, அவரை என்றென்றைக்கும் நம்பு. 
