93
1 கர்த்தர் அரசர். 
அவர் மகத்துவத்தையும் வல்லமையையும் ஆடையைப்போல் அணிந்திருக்கிறார். 
அவர் ஆயத்தமாயிருப்பதால் உலகம் பாதுகாப்பாய் உள்ளது, 
அது அசைக்கப்படுவதில்லை. 
2 தேவனே, உமது அரசு என்றென்றும் தொடருகிறது. 
தேவனே, நீர் என்றென்றைக்கும் வாழ்கிறீர்! 
3 கர்த்தாவே, ஆறுகளின் ஒலி மிகுந்த இரைச்சலுடையது. 
மோதும் அலைகள் இரைச்சலெழுப்புகின்றன. 
4 கடலின் மோதும் அலைகள் ஒலிமிகுந்து வல்லமை மிகுந்தவையாக உள்ளன. 
ஆனால் மேலேயுள்ள கர்த்தர் இன்னும் மிகுந்த வல்லமையுள்ளவர். 
5 கர்த்தாவே, உமது சட்டங்கள் என்றென்றும் தொடரும். 
உமது பரிசுத்த ஆலயம் வெகு காலம் நிலைநிற்கும். 
