113
1 கர்த்தரைத் துதியுங்கள். 
கர்த்தருடைய ஊழியர்களே, அவரைத் துதியுங்கள்! 
கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள். 
2 கர்த்தருடைய நாமம் என்றென்றும் ஆசீர்வதிக்கப்படுவதாக. 
3 சூரியன் உதிக்கும் கிழக்கிலிருந்து சூரியன் மறைகிற மேற்குவரை 
கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக. 
4 எல்லா தேசங்களிலும் கர்த்தர் உயர்ந்தவர். 
வானங்கள் மட்டும் அவரது மகிமை எழும்புகிறது. 
5 எங்கள் தேவனாகிய கர்த்தரைப் போன்றோர் எவருமில்லை. 
தேவன் பரலோகத்தின் உயரத்தில் வீற்றிருக்கிறார். 
6 வானத்தையும் பூமியையும் கீழே குனிந்து நோக்கும்வண்ணம் 
தேவன் நமக்கு மேலே மிக உயரத்தில் இருக்கிறார். 
7 தூசியிலிருந்து ஏழைகளை தேவன் தூக்கிவிடுகிறார். 
குப்பைக் குவியலிலிருந்து தேவன் பிச்சைக்காரர்களை வெளியேற்றுகிறார். 
8 அந்த ஜனங்களை தேவன் முக்கியமானவர்களாக்குகிறார். 
அந்த ஜனங்களை தேவன் முக்கியமான தலைவர்களாக்குகிறார். 
9 ஒரு பெண்ணிற்குக் குழந்தைகள் இல்லாமல் இருக்கலாம், 
ஆனால் தேவன் அவளுக்குக் குழந்தைகளைத் தந்து அவளை மகிழ்ச்சியாகுவார். 
கர்த்தரைத் துதியுங்கள்! 
