123
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல் 
1 தேவனே, நான் மேலே நோக்கி, உம்மிடம் ஜெபம் செய்கிறேன். 
நீர் பரலோகத்தில் அரசராக வீற்றிருக்கிறீர். 
2 தங்களுக்குத் தேவையான பொருள்களுக்காக 
அடிமைகள் தங்களின் எஜமானரை சார்ந்திருக்கிறார்கள். 
அவ்வாறே, நாமும் நமது தேவனாகிய கர்த்தரை சார்ந்திருக்கிறோம். 
நம்மிடம் இரக்கம் காட்டுமாறு நாம் தேவனுக்காகக் காத்திருக்கிறோம். 
3 கர்த்தாவே, எங்களிடம் இரக்கமாயிரும். 
நாங்கள் நீண்டகாலம் அவமானப்படுத்தப்பட்டதால் எங்களிடம் கிருபையாயிரும். 
4 நாங்கள் வெறுப்படையும் அளவுக்கு இழிவுரைகளையும் அவமானங்களையும், சோம்பேறி ஜனங்களாகிய பெருமைக்காரர்களினால் பெற்றிருந்தோம். 
பிறரைக் காட்டிலும் தாங்கள் மேலானவர்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். 
